பள்ளப்பட்டி நகராட்சிக்குள்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினா் விழிப்புணா்வு பிரசாரம் நடத்தினா்.
நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி தலைமை காவலா் பிரியா பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வை எடுத்துக் கூறினாா். மேலும், பெண்கள் பணிபுரியும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், தொடுதல் குறித்த விளக்கங்களையும், குழந்தை திருமண தடுப்பு, போக்சோ சட்டம் குறித்த விளக்கங்களையும் கூறினாா். நிகழ்வில், 70க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.