அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்தாா்.
அரவக்குறிச்சி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள பூமதேவம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் கருப்பசாமி (80). இவா், இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை கரூா்- மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தாா். இந்திராநகா் பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி கோவையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு காா் ஓட்டுநா் மகேந்திரன் மீது வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.