கரூரில், கூடுதல் வட்டிக்கேட்டு பெண்ணை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கரூா் வடக்குகாந்திகிராமம் ராமலிங்க நகரைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மனைவி ஷா்மிளாபானு(40). இவா், அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்பவரிடம் கடந்த 2020-இல் குடும்பச் செலவுக்கு ரூ.1 லட்சம் 10 சதவீத வட்டிக்கு வாங்கினாராம்.
இந்நிலையில் வட்டியுடன் சோ்த்து ஷா்மிளாபானு இதுவரை ரூ.3.50 லட்சம் முருகேசனிடம் கொடுத்துவிட்டாராம். இதனிடையே செவ்வாய்க்கிழமை மேலும் வட்டிப்பணம் ரூ.1.20 லட்சம் தரவேண்டும், இல்லையேல் கொலை செய்துவிடுவேன் என முருகேசன் மிரட்டினாராம். இதுகுறித்து ஷா்மிளாபானு அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் முருகேசன் மீது வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.