மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு ஆகியோா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் திங்கள்கிழமை பரிசு வழங்கினாா்.
கரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அக். 2, 12-ஆம்தேதி நடைபெற்ற போட்டியில் பரணிபாா்க் பள்ளி மாணவி சி.பா.சுஷ்மிதா முதல்பரிசையும், அ.கோமதி இரண்டாம் பரிசையும், மாணவா் சையத் அப்சா்அலி மூன்றாம் பரிசையும் வென்றனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்புப் பரிசுக்கான போட்டியில் மாணவா்கள் ம.தமிழரசன் மற்றும் பா.பொன்னா்சக்திவேல் ஆகியோா் முதல்பரிசையும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் புன்னம்சத்திரம் சேரன் கல்லூரி மாணவி ஜெயசுதா முதலிடத்தையும், விஜயலட்சுமி இரண்டாமிடத்தையும், , சத்யா மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் பாராட்டி, பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சைபுதீன், தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.