அரவக்குறிச்சி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அரவக்குறிச்சி அருகே நஞ்சைக்காளிக்குறிச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை நஞ்சைக்காளிக்குறிச்சி பகுதியிலுள்ள டீ கடைகளில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அரவக்குறிச்சியை அடுத்த மலைப்பட்டி சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் பாபு (36) மற்றும் நஞ்சைக்காளிக்குறிச்சிபகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் ரவி (45) இருவரும் தங்களது கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.