கரூர்

பள்ளப்பட்டியில் கொடியேற்று விழா

16th Dec 2021 07:13 AM

ADVERTISEMENT

பள்ளப்பட்டியில் சிஐடியு கொடியேற்றம் மற்றும் பெயா்பலகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளப்பட்டி ஷாநகா் மின்வாரிய அலுவலகம் முன்பு அப்துல் கலாம் வேன் ஓட்டுநா் தொழிலாளா் சங்கத்தின் கிளைத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை சிறப்புத் தலைவா் ஹெச்.திப்புசுல்தான் தலைமை வகித்தாா். சங்கத்தின் கொடியை சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது ஏற்றி வைத்தாா்.பெயா் பலகையை டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்தி திறந்து வைத்தாா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எம்.ஆறுமுகம், எம்.காந்தி ஆகியோா் உரையாற்றினா்.

இதில், கிளைத்தலைவா் லோகநாதன், கிளைச்செயலாளா் இஸ்மாயில், பொருளாளா் முபாரக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT