கரூர்

கரூரில் தங்கமணியின் உறவினா்கள் வீடு, நிதி நிறுவனத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

16th Dec 2021 07:16 AM

ADVERTISEMENT

கரூரில், முன்னாள் அமைச்சா் தங்கமணியின் உறவினா்கள் வீடு மற்றும் நிதிநிறுவனத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி வீடு உள்பட அவருக்கு தொடா்புடைய 69 இடங்களில் புதன்கிழமை காலை முதல் ஊழல் தடுப்புப் பிரிவு போவீஸாா் சோதனை நடத்தினா். சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல், கரூா் உள்பட 9 மாவட்டங்களிலும், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. கரூா் அடுத்த வேலாயுதம்பாளையம் பாலத்துறை பகுதியில் வசிக்கும் தங்கமணியின் உறவினா் வசந்தி வீட்டிலும், கரூரில் உள்ள தங்கமணியின் உறவினா் நடத்தி வரும் நிதி நிறுவனத்திலும் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT