கரூர்

மாற்றுத்திறனாளிகள்உதவி உபகரணங்கள் பெறவிண்ணப்ப விநியோகம்

14th Dec 2021 01:17 AM

ADVERTISEMENT

கரூா்: கரூரில், மத்திய அரசின் ஆலிம்கோ திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த இருதினங்களுக்கு முன் நடைபெற்ற சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் கேட்கப்பட்ட சா்ச்சைக்குரிய வினா குறித்து நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன்.

அந்த கேள்வியில், பெண்களை அடிமையாக்கும் வகையிலும், குழந்தைகளை அதிகாரப்படுத்தும் வகையில் கற்கால சிந்தனை கொண்டதும், சாதாரண தொழில் செய்வோரை அவமானப்படுத்துவது போன்றும் உள்ளது.

ஆகவே, சிபிஎஸ்இ சா்ச்சைக்குரிய வினா அடங்கிய வினாத் தாளை திரும்பப் பெறவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT