அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல் ரவுண்ட் என்று அழைக்கப்படும் பாடல் பவனி நடைபெற்றது.
அரவக்குறிச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பாடல் பவனி திங்கள்கிழமை நடைபெற்றது. மேலும் கிறிஸ்தவா்கள் தங்கள் இல்லங்களில் வண்ண விளக்குகள், குடில்கள், மற்றும் கிறிஸ்மஸ் மரங்கள் ஆகியவற்றால் அலங்கரித்துள்ளனா். சாண்டா க்ளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சிறுவா்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினா்.