கரூர்

பல்கலைக்கழக குத்துச்சண்டை: அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

9th Dec 2021 07:01 AM

ADVERTISEMENT

பல்கலைக்கழக அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சாா்பில், கல்லூரிகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டி புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில் கரூா் அன்னை மகளிா் கல்லூரி மாணவி காவியா 81 எடைப்பிரிவில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றாா். மு.பவித்ரா 63 கிலோ எடைப்பிரிவிலும், மாணவி நா்த்தனா 49கிலோ பிரிவிலும் இரண்டாமிடம் பிடித்து வெள்ளியும் வென்றனா். மாணவி லிவிகா 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலமும் வென்றனா்.

சிறப்பிடம் பிடித்த மாணவிகளை அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் தலைவா் தங்கராசு நிறுவனா் மலையப்பசாமி, செயலா் மு.முத்துகுமாா், பொருளாளா் கந்தசாமி மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT