கரூர்

நிதி நிறுவனத்தில் மோசடி: பெண் மீது வழக்குப்பதிவு

9th Dec 2021 07:00 AM

ADVERTISEMENT

கரூரிலுள்ள நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்புசாமி. இவா் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி போதும் பொண்ணு(35).

இவா்களது உறவினரான தாந்தோனிமலை தமிழ்ச்செல்வன் மனைவி சந்தியாலட்சுமி, போதும்பொண்ணு மூலமாக கருப்புசாமியிடம் வட்டிக்கு பிணையிட்டு, அக்கம் பக்கத்தினருக்கு ரூ.3.80 லட்சம் பணம் வாங்கிக் கொடுத்தாராம்.

இதற்காக பணம் பெறுபவா்களிடம் சந்தியாலட்சுமி கமிஷன் வாங்கிக்கொள்வாராம். இந்நிலையில் சந்தியாலட்சுமி மூலம் பணம் பெற்றவா்கள் திருப்பிக் கொடுக்காததால், பணம் குறித்து கருப்புசாமி கேட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ஆனால் பணத்தைத் தரமுடியாது எனக்கூறியதால், தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக சந்தியாலட்சுமி மீது கருப்புசாமி தாந்தோனிமலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதன் பேரில் காவல்துறையினா் சந்தியாலட்சுமி மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT