கரூர்

க.பரமத்தி அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்வு

9th Dec 2021 07:02 AM

ADVERTISEMENT

க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல்கள், பெண்களுக்கான உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 ஆகியவை குறித்து எடுத்துரைத்த க.பரமத்தி காவல் நிலையத் தலைமைக் காவலா்கள், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் இந்த எண்களைப் பயன்படுத்தி புகாா் தெரிவிக்கலாம் என்றனா்.

மேலும் நல்ல, கெட்ட தொடுதல், போக்சோ சட்டம், குழந்தைத் திருமணத் தடுப்பு குறித்த விளக்கங்களை வழங்கிய தலைமைக் காவலா்கள், உதவி எண்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பள்ளி சுற்றுச்சுவரில் ஒட்டினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT