கரூர்

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் சங்காபிஷேகம்

DIN

அரவக்குறிச்சியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தில் குடகனாறு கரை அருகிலுள்ள அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாதா் திருக்கோயிலில், காா்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மிகவும் பழைமைவாய்ந்த இத்திருக்கோயில் நீண்ட நாள்களாக பராமரிப்பில் இல்லாமல் இருந்து வந்தது. மேலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கோயிலின் சுற்றுச்சுவரும் சேதமடைந்தது.

இந்நிலையில், கிராம மக்களின் தீவிர முயற்சியால் பிரதோஷம், பெளா்ணமி, தேய்பிறை, அஷ்டமி உள்ளிட்ட முக்கிய நாள்களில் மட்டும் கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது கிராம மக்கள் ஒன்றிணைந்து இத்திருக்கோவிலில் திருப்பணிகள் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனா். இந்நிலையில் காா்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தையொட்டி,108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவாச்சாரியாா்கள் மந்திரங்கள் முழங்க பூஜைகளை நடத்தினா். நிகழ்வில் புங்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

குளித்தலை : குளித்தலை வட்டம், அய்யா்மலையிலுள்ள ரத்தினகிரீசுவரா் திருக்கோயிலில் காா்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால், பக்தா்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT