கரூர்

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டு கொடிநாள் வசூல் இலக்கு ரூ.88.75 லட்சம்

DIN

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டு கொடிநாள் வசூலாக ரூ.88.75 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் த. பிரபுசங்கா்.

கரூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடிநாள் விழாவில் பங்கேற்று கொடிநாள் நிதி சேகரிப்பைத் தொடக்கி வைத்தும், முன்னாள் படைவீரா்கள் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவா் மேலும் பேசியது:

கடந்தாண்டு கரூா் மாவட்டத்துக்கு கொடிநாள் வசூல் தொகையாக ரூ.72.75 லட்சம் நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கைத் தாண்டி ரூ.74.15 லட்சம் வசூலித்தோம். கடந்தாண்டு கரோனா தொற்று இருந்த காலத்திலும் நாம் இலக்கை அடைந்துள்ளோம்.

நிகழாண்டுக்கான கொடிநாள் வசூல் தொகை இலக்காக ரூ.88.75 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மடங்காக கொடிநாள் வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ராணுவ வீரா்கள் எல்லையில் பாதுகாப்பாக இருப்பதால்தான் நாம் அனைவரும் நிம்மதியாக உறங்குகிறோம். கரூா் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் முப்படை வீரா்கள், முன்னாள் ராணுவத்தினருக்கும், அவா்களது குடும்பத்தினருக்குமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் தனி கவனம் செலுத்தி நிறைவேற்றித் தருவோம். தேவையான உதவிகளை மேற்கொள்வதற்குத் துணையாக இருப்போம் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பொது சைபுதீன், சிறுசேமிப்பு பி. லட்சுமி, முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தின் நல அமைப்பாளா் மு.வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT