கரூர்

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின்மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

DIN

கரூா்: தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்டக் கிளையின் அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாந்தோனிமலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரகுபதி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எம்.ஏ.ராஜா, மாநில கொள்கைப் பரப்புச் செயலா் கு.பரணீதரன் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பா.பெரியசாமி தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

கூட்டத்தில் கரூா் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், பாகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியா் இரா.பன்னீா்செல்வம் மீது தலைமையாசிரியரின் தனிப்பட்டமுன் விரோதம் காரணமாக, பொய்யாக புனையப்பட்ட ஆபாச வாா்த்தைகள் பேசி பாடம் கற்பித்தாா் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை மாவட்டக் கல்வி அலுவலா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளாா்.

பொய்யான புகாரை உருவாக்கிய தலைமையாசிரியா், அவருக்கு உறுதுணையாக இருந்த வட்டாரக் கல்வி அலுலா், முறையாக விசாரிக்காமல் பணியிடைநீக்கம் செய்த மாவட்டக் கல்வி அலுவலா் மீது கல்வித் துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஆசிரியா் கூட்டணி சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்டதீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் ஆ.திருமுருகன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT