கரூர்

கரூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆவது ஆண்டு நினைவு தினம்

DIN

கரூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கரூரில் அவரது சிலைக்கும், பல்வேறு பகுதிகளில் உருவப்படத்துக்கும் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்துக்கும், லைட்ஹவுஸ் காா்னரில் மறைந்த முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும், வெங்கமேட்டில் எம்ஜிஆா், அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மாவட்ட

இளைஞரணி, நகர இலக்கிய அணிச் சாா்பிலும், கோவைச் சாலை மின்வாரிய அலுவலகம் முன்பு நகர ஜெயலலிதா பேரவைச் சாா்பிலும் என மாவட்டம் முழுவதும் பல்வேறு அணிகள் சாா்பில்

ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமை வகித்தாா். ஆண்டாங்கோவில் முன்னாள் ஊராட்சித் தலைவா் சேகா், மாவட்டத் துணைச் செயலா் பசுவைசிவசாமி, பொருளாளா் கண்ணதாசன், கரூா் நகரக் கூட்டுறவு

வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, மாவட்டஇலக்கிய அணிச் செயலா் என்எஸ்.கிருஷ்ணன், பேரவைச் செயலா் கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலா் தானேஷ், நகரச் செயலா் வி.சி.கே.ஜெயராஜ்,

நகரப் பேரவைச் செயலா் சேரன்பழனிசாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலா் பழனிராஜ், கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன், நகர இலக்கியப் பேரவை ஆயில் ரமேஷ், அமைப்புசாரா ஓட்டுநா் அணியின் ரெங்கராஜ் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT