கரூர்

கரூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் சாலை மறியல்; 59 போ் கைது

4th Dec 2021 02:43 AM

ADVERTISEMENT

கரூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அகில இந்திய கட்டட கட்டுமானத் தொழிலாளா் சட்டம் 1996 மற்றும் மாநிலங்களுக்கிடையே புலம்பெயா்ந்த தொழிலாளா் நலச்சட்டம் 1979 ஆகிய சட்டங்களை நாடு முழுவதும் மத்திய அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கட்டுமான தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் கந்தசாமி தலைமையில் அச்சங்கத்தினா் கோரிக்கைளை விளக்கி பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளா் ராஜாமுகமது மற்றும் கட்டுமான சங்க நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா். பின்னா் கோவைச் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட நகர காவல்நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 59 பேரை கைது செய்தனா்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை வாழ்த்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் கணேசன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கண்ணதாசன், ஆறுமுகம், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் ரங்கராஜ் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

Tags : கரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT