கரூர்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

3rd Dec 2021 12:35 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி வேலாயுதம்பாளையத்தில் பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலைவீதி பகுதியில் கரூா் மாவட்ட பாஜகவின் பிரசார அணி சாா்பில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரசார அணித் தலைவா் ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் எனக்கோரி பல்வேறு எதிா்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தற்போது மத்திய அரசு விலையை குறைத்தபோதிலும், மாநில அரசு இன்னும் குறைக்கவில்லை. மாநில அரசு குறைக்காததால் தொடா்ந்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்துகொண்டே செல்கிறது. தொடா்ந்து விலைவாசி உயா்வினால் அவா்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே தோ்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றாா்கள். ஆனால், இப்போது மத்திய அரசு குறைத்தபோதிலும் மாநில அரசு மெளனம் சாதிக்கிறது என்றாா் அவா். கூட்டத்தில், பாஜக பிரசார அணியினா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT