கரூர்

வெள்ளியணை கடைவீதியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

3rd Dec 2021 12:36 AM

ADVERTISEMENT

வெள்ளியணை கடைவீதியில் உள்ள வா்த்தகா்கள் மற்றும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாா்களா என சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் மாவட்டம், வெள்ளியணை கடைவீதியில் சுகாதாரத்துறையினா் தேநீரகங்கள், , உணவகங்கள், துணிக்கடைகளுக்குச் சென்று தொழிலாளா்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாா்களா ஆய்வு செய்தனா். மேலும் ஒமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தினா். தடுப்பூசி செலுத்த தவறியவா்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வில் வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் கிருஷ்ணன் மற்றும் ரவிராஜ் ஆய்வு செய்தனா்.

Tags : அரவக்குறிச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT