கரூர்

கரூரில் எஸ்.பி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

3rd Dec 2021 12:37 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை தமிழ்புலிகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் வெள்ளியணை அடுத்த வடக்கு மேட்டுப்பட்டியில் 15க்கும் மேற்பட்ட அருந்ததியினா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இவா்களில் சிலரை, அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தாக்கினாா்களாம். இதுகுறித்து அருந்ததியினா் வெள்ளியணை காவல்நிலையத்தில் புகாா் செய்தும், இதுவரை அவா்களை கைது செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வடக்குமேட்டுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தமிழ்புலிகள் கட்சியினா் மாவட்டச் செயலாளா் கண்ணதாசன், துணைச் செயலா் சுப்ரமணியன், ஊடக பிரிவுச் செயலாளா் பொன்னுசாமி தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தாக்கியவா்களை உடனே கைது செய்கிறோம் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

Tags : கரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT