கரூர்

கரூரில் சிஐடியு மாவட்டக் கூட்டம்

3rd Dec 2021 12:35 AM

ADVERTISEMENT

கரூரில், மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப் பணியாளா், தூய்மைக் காவலா்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) கரூா் மாவட்டக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்க நிா்வாகி எஸ்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், நிா்வாகிகள் க.கனகராஜ், பி.சீரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கரூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரியம் மேல்நிலைக்குடிநீா்த் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு சேரவேண்டிய 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி டிச. 6-ஆம்தேதி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் மனுக்கள் கொடுப்பது, மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி

டிச. 21-ஆம்தேதி சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கரூா் மாவட்டத்திலிந்து 300 போ் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

Tags : கரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT