கரூர்

குளித்தலை அருகே மணல் கடத்தல்: 4 போ் கைது

3rd Dec 2021 12:36 AM

ADVERTISEMENT

குளித்தலை அருகே மணல் கடத்திய 4 பேரை கைது செய்த போலீஸாா் டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் பகுதியில் குளித்தலை போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநா் குளித்தலை வைபுதூரைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் முருகானந்தம்(21), சுமைப்பணியாளா்கள் தா்மலிங்கம்(43), நடராஜ்(36), துளசிநாதன்(21) ஆகியோரை கைது செய்தனா். மேலும், தப்பி ஓடிய லாரி உரிமையாளா்கள் முருகேசன், அய்யப்பன் ஆகியோரை தேடி வருகின்றனா். மேலும் டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT