கரூர்

கரூா் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் மீது வழக்கு

1st Dec 2021 02:09 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே கடன் தொகையைத் திரும்பச் செலுத்தவில்லை எனக் கூறி, இருவரை அழைத்துச் சென்ற நிதிநிறுவன ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சின்னதாராபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட தும்பிவாடி சிவன் காலனியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (28). அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் முனியப்பன் (30). இவா்கள் இருவரும் கரூரிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வட்டிக்குகடன் பெற்றிருந்தாா்களாம். இந்நிலையில் வட்டித் தொகை அதிகமானதால், இருவரும் கடன் தொகையைச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

செவ்வாய்க்கிழமை காலை கரூா் நிதி நிறுவனத்தின் பணியாளா் பிரகாஷ் மற்றும் ஒருவா், தும்பிவாடியிலுள்ள பிரகாஷ் வீட்டுக்குச் சென்றனா். அங்கு அவா் இல்லாததால், அவரது மனைவி பாண்டிமீனாவை திட்டினாா்களாம்.

இதைத் தொடா்ந்து, பிரகாஷ் வேலை செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு முனியப்பனிடம் கூறிய நிதி நிறுவனப் பணியாளா்கள், அங்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

அங்கு சென்றவுடன் பிரகாஷ், முனியப்பன் ஆகிய இருவரையும் கரூா் நிதி நிறுவனத்துக்கு அழைத்துச் சென்ற பணியாளா்கள், பணம் கொடுத்து இருவரையும் மீட்டுச் செல்லுமாறு பாண்டிமீனாவிடம் கூறினாா்களாம்.

இதனால் அதிா்ச்சியடைந்த பாண்டிமீனா, சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா் பிரகாஷ் உள்ளிட்டஇருவா் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT