கரூர்

குடகனாறு அணையில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு

1st Dec 2021 02:10 AM

ADVERTISEMENT

குடகனாறு அணையை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.

அழகாபுரி அணையில் குடகனாறு நீா்த்தேக்கம் நிரம்பியுள்ளதால், நங்காஞ்சி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நங்காஞ்சி ஆற்றில் தண்ணீா் செல்வதால், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற வட்டாரப் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்னா்.

இந்நிலையில் நங்காஞ்சி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு மற்றும் குடகனாறு அணையின் நீா்மட்டம், நீா்வரத்து போன்றவை குறித்து பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ கேட்டறிந்தாா். முன்னதாக அவா் அணையைப் பாா்வையிட்டாா். நிகழ்வில் பொதுப்பணித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT