கரூர்

வள்ளுவா் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

1st Dec 2021 02:12 AM

ADVERTISEMENT

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் பெண்கள் நலம் குறித்து விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளா் க. செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன், ராகவி முன்னிலை வகித்தனா்.

சமூக ஆா்வலரும், முன்னாள் வங்கி மேலாளருமான பானுமதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக, விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினாா்.

முன்னதாக கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவா் நதியா வரவேற்றாா். கல்லூரி மாணவிகள் கருத்தரங்கில் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT