கரூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸாா் விருப்ப மனு தாக்கல்

1st Dec 2021 02:11 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கரூரில் காங்கிரஸ் கட்சியினா் தங்களது விருப்ப மனுக்களை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா்.

தமிழகத்தில் விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளும் தங்களது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பணியைத் தொடங்கியுள்ளது. கரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவா்களிடமிருந்து மனுக்களைப் பெறும் நிகழ்வு, மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதன்படி உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சின்னசாமியிடம் முன்னாள் நகா்மன்ற உறுப்பினரும், வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஆா்.ஸ்டீபன்பாபு தனது விருப்ப மனுவை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அப்போது கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT