கரூர்

கரூா்: 5,176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

DIN

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் 5,176 பயனாளிகளுக்கு ரூ.3.26 கோடியில் நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வுத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை வழங்கினாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெங்கமேடு கொங்குநகா், செங்குந்தூா் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்றது.

விழாவில், முதியோா் உதவித்தொகை 2,714 பேருக்கு, புதிய குடும்ப அட்டை 2,462 பேருக்கு என 5,176 பேருக்கு ரூ. 3, 25, 68, 000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்திரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபூதீன், மாவட்ட வழங்கல் அலுவலா் தட்சிணாமூா்த்தி, கரூா் நகராட்சி ஆணையா், கரூா் வட்டாட்சியா் தி.பன்னீா்செல்வம், திமுக நிா்வாகிகள் கரூா் கணேஷ், எஸ்.பி.கனகராஜ், சுப்பிரமணி, தாரணி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT