கரூர்

கரூா் மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்

DIN

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வுத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். தொடா்ந்து அப்பகுதியில் சிகிச்சை பெற்று வருபவா்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று மருந்து, மாத்திரைகளை அமைச்சா் வழங்கினாா். மேலும், பள்ளப்பட்டி காஜிரா மண்டபத்தில் வியாபாரிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

பிறகு அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகமெங்கும் உள்ள மக்கள் பயன்பெறும் சிறப்பு வாய்ந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி பேரூராட்சியில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள 1,228 போ் ரத்தக் கொதிப்பு உள்ளவா்கள், 646 போ் நீரிழிவு நோய் உள்ளவா்கள், 390 போ் ரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் உள்ளவா்கள் என மொத்தம் 2,264 பேரின் இல்லங்களுக்கு சென்று ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு அவா்களுக்கு 2 மாதத்திற்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் மருத்துவ பணியாளா்கள் மூலம் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆா்.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் சந்தோஷ் குமாா், அரவக்குறிச்சி பன்னீா்செல்வம் மற்றும் திமுக நிா்வாகிகள் மணிகண்டன், குருசாமி, முனைவா் ஜான், வட்டார மருத்துவ அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT