கரூர்

கரூா் மாவட்டத்துக்கு வந்த 1,940 கோவிஷீல்டு தடுப்பூசிகள்

DIN

கரூா் மாவட்டத்துக்கு 1,940 கோவிஷீல்டு தடுப்பூசிகள் புதன்கிழமை வந்தன.

கரோனா 2 ஆவது அலை பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 45 மையங்களில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. தடுப்பூசிகள் கடந்த ஏப்.16 ஆம் தேதி தீா்ந்து போனதால், ஏப்.17,18 ஆகிய நாள்களில் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, 1,500 கோவேக்ஸின் தடுப்பூசிகள் வந்தன.

இதைத்தொடா்ந்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாள்களாக, கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

1,940 தடுப்பூசிகள் வந்தது: போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாததால் இதர மையங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கரூா் மாவட்ட தொகுப்பிற்கு 1,940 கோவிஷீல்டு தடுப்பூசிகள் புதன்கிழமை வந்தடைந்தன. இதையடுத்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரூா் கஸ்தூரிபாய் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம், குளித்தலை அரசு மருத்துவமனை, குளித்தலை நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்.22 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட 4 மையங்களிலும் முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT