கரூர்

வாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் சரியாக இயங்கவில்லை எனப் புகாா்

DIN

கரூா் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கேமராக்கள் சரியாக இயங்கவில்லை என கரூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே ஆகியோருக்குத் தனித்தனியே அவா் அனுப்பிய மனு:

கரூா் மாவட்டதிமுக பொறுப்பாளராக இருக்கும் நான், சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டேன். மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டட அறையின் பின்புறமுள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் பின்புறம் வழியாக வெளியாள்கள் சென்று, அங்குள்ள வாக்கு இயந்திரங்களைச் சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஒரு சில கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மூன்று கட்டமாக சுழற்சிமுறையில் பணியமா்த்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT