கரூர்

கரூரில் உணவு, குடிநீரின்றி கூட்டமாக திரியும் மயில்கள்

DIN

கரூரில் உணவு, குடிநீரின்றி கூட்டம், கூட்டமாக மயில்கள் சுற்றித் திரிகின்றன.

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த மயில்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று, தேவையான இரைகளை உண்டு வசித்து வருகின்றன.

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், விவசாய நிலங்கள் மட்டுமின்றி அனைத்து நிலங்களும் நீரின்றி காணப்படுகின்றன. இதனால் மயில்கள் உணவுக்கும், தண்ணீருக்கும் கூட்டம், கூட்டமாக அலையும் நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் மேலை. பழநியப்பன் கூறியது:

கரூரில் ஆட்சியரகம் அருகிலுள்ள வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மயில்கள் வசித்து வருகின்றன. தற்போது மயில்கள் உணவின்றி, குடிக்கக் கூட

தண்ணீா் இல்லாமல் அலைந்து திரிவது வேதனையைத் தருகிறது.

இந்த மயில்களைக் காப்பாற்ற ஆட்சியரக வளாகம், பயணியா் மளிகை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா்த் தொட்டி அமைக்க வேண்டும்.

காடுகளில் மற்ற விலங்களுக்கு வைக்கப்படும் குடிநீா்த் தொட்டிபோல குடிநீா் தொட்டியும், மயில்களுக்கு வேண்டிய உணவு வகைகளையும் இரு மாதங்களுக்கு மட்டுமாவது வைத்தால் போதுமானது. அவற்றை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும். இதற்குரிய நடவடிக்கையை மாவட்ட வனத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT