கரூர்

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு கரோனா தொற்று

DIN

ககரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலைக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

ஐபிஎஸ் அலுவலராக கா்நாடக மாநிலத்தில் பணியாற்றி, பின்னா் விருப்ப ஓய்வு பெற்ற கே.அண்ணாமலை பாஜகவில் இணைந்தாா். பின்னா் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவா், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டாா். இதற்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அண்ணாமலைக்கு, கரோனா மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. தொடா்ந்து அவா் அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

‘எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த காலங்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என தனது சுட்டுரைப் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT