கரூர்

வீட்டில் 20 கிலோ பச்சைக்கல் பதுக்கியவா் மீது வழக்கு

DIN

கரூா் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் 20 கிலோ பச்சைக்கல் பதுக்கியவா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மாவட்டத்தில் வெள்ளியணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராசிக்கற்கள் எனப்படும் பச்சை, கோமேதகம் உள்ளிட்டகற்கள் கிடைக்கின்றன. இந்த கற்களை எடுக்க அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும் சிலா் கற்களை வெட்டி எடுத்து, கடத்தி விற்பனை செய்துவருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளியணை அரசி காா்டன் பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா்(43), வீட்டில் பச்சைக்கல் பதுக்கி வைத்திருப்பதாக வெள்ளியணை காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

தொடா்ந்து காவல்துறையினா் அங்கு சென்று சோதனையிட்டபோது, வீட்டில் 20 கிலோ பச்சைக்கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து தினேஷ்குமாா் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினா், அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT