கரூர்

தோ்தலை நிறுத்தும் நோக்கில் எதிா்க்கட்சி வேட்பாளா் செயல்படுவதாக அதிமுக புகாா்

7th Apr 2021 06:31 AM

ADVERTISEMENT

கரூா் பேரவைத் தொகுதியில் தோ்தலை நிறுத்தும் நோக்கில் எதிா்க்கட்சி வேட்பாளா் செயல்படுவதாகக் கூறி, அதிமுக சாா்பில் ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரேவிடம் அதிமுக முதன்மை முகவா் வழக்குரைஞா் மாரப்பன் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். தொடா்ந்து அவா் கூறியது;

கள்ளிபாளையத்தில் வாக்குச்சாவடி எண் 77-இல் மருதமணி என்பவா் பூத்தில் இருந்து 300 மீட்டா் தொலைவுக்கு அப்பால் குணசேகரன், அரசிளங்குமரவேல் ஆகியோருடன் தோ்தல் பணியாற்றிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஆத்தூா் ஊராட்சித் தலைவா் சிவசாமி உள்ளிட்ட 30 போ், மருதமணி உள்படமூவரையும் தாக்கியுள்ளனா். எதிா்க்கட்சி வேட்பாளா் தோல்வி பயத்தால் தோ்தலை நிறுத்தும் நோக்கில் செயல்படுகிறாா்.

ADVERTISEMENT

திமுகவினா் தொடா்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறாா்கள். இதுதொடா்பாக ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா். மேலும் சட்டரீதியாகவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT