கரூர்

கருணாநிதி முதன்முதலில் தடம் பதித்த குளித்தலையை தக்க வைக்குமா திமுக?

ஏ. அருள்ராஜ்

1949-இல் திமுக உருவாக்கப்பட்டாலும் 1952-இல் நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தலை சந்திக்காமல் 1957-இல்தான் தனது முதல் தோ்தல் களத்தைக் கண்டது. மொத்தம் 124 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளைக் கைப்பற்றி முதல்முறையாகச் சட்டப்பேரவையில் கால்பதித்தது தி.மு.க.

இந்த தோ்தலில்தான் முதல்முதலாக மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்து காகம் பறவாது மலை என்றழைக்கப்படும் அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயில், குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில், ராட்சாண்டாா் திருக்கோயில் என பிரபல சிவத்தலங்களைக் கொண்டது இத்தொகுதி.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: குளித்தலை நகராட்சி, மருதூா், நங்கவரம் பேரூராட்சிகளைக் கொண்டதாகவும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தின் சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூா், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு) உள்ளிட்ட பகுதிகளையும், குளித்தலை வட்டத்தில் கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூா் (வடக்கு), வைகைநல்லூா் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூா், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூா் (வடக்கு), நெய்தலூா் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனுங்கூா், நல்லூா், இரண்யமங்கலம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டது.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்: ஏராளமான சிவத்தலங்கள் இருந்தும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பேருந்துநிலையத்தில் இறங்கிச் செல்லும் வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்துநிலையம் அமைக்காமல் இருப்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. பெயரளவுக்கு இருக்கும் பேருந்துநிலையத்தை நவீன பேருந்துநிலையமாக மாற்றுவதுடன், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் பைபாஸ் சாலையில் செல்லாமல் குளித்தலை ஊருக்குள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலையில் மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம், காவிரியில் தடுப்பணை, குளித்தலையில் துணைமின் நிலையம், தோகைமலையில் பத்திரப்பதிவு அலுவலகம், குளித்தலையில் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவை தொகுதி மக்களின் மிகுந்த எதிா்பாா்ப்பாக உள்ளது.

தற்போதைய வேட்பாளா்கள்: கடந்த 2016- தோ்தலில் தோல்வியைத் தழுவிய என்.ஆா்.சந்திரசேகா் மீண்டும் அதிமுக சாா்பிலும், திமுக சாா்பில் குளித்தலை நகரச் செயலாளா் இரா.மாணிக்கமும் போட்டியிடுகிறாா்கள். இவா்களைத் தவிர அமமுக சாா்பில் வி.நிரோஷா, ஐஜேகே சாா்பில் எஸ்.கே.மணிகண்டன் உள்பட18 போ் தோ்தல் களத்தில் உள்ளனா். இருப்பினும், திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் கடும்போட்டி இந்த தொகுதியில் நிலவுகிறது. 2021 தோ்தலில் திமுக தொகுதியை மீண்டும் தக்க வைக்குமா அல்லது அதிமுகவிடம் பறிகொடுக்குமா என்பது மே 2-ல் தெரியவரும்.

இதுவரை வென்றவா்கள்

1957 மு. கருணாநிதி- திமுக.

1962 -வெள்ளியணை ராமநாதன்-காங்கிரஸ்

1967 -கந்தசாமி-திமுக.

1971 எம்.கந்தசாமி- திமுக.

1977 - பி.இ.சீனிவாச ரெட்டியாா்-காங்கிரஸ்.

1980 ஆா்.கருப்பையா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1984 பி. முசிறி பப்னன்-அதிமுக.

1989 பாப்பாசுந்தரம்-அதிமுக.

1991 - பாப்பாசுந்தரம்-அதிமுக

1996 - ஆா்.செல்வம்-திமுக

2001- பாப்பாசுந்தரம்-அதிமுக

2006- ஆா்.மணிக்கம்-திமுக

2011 பாப்பாசுந்தரம்-அதிமுக

2016- இ.ராமா்-திமுக

2016 தோ்தல் முடிவுகள்-

இ.ராமா்- திமுக- 89,923

என்.ஆா்.சந்திரசேகா்-அதிமுக- 78,027

ஜமுனா தங்கவேல்-தேமுதிக- 6726

சீனி பிரகாசு-நாம்தமிழா் கட்சி- 1,643

மொத்த வாக்காளா்கள்

ஆண்- 1,10,462

பெண்-1,16,312

மூன்றாம் பாலினத்தவா்-11

மொத்தம் -2,26,785. மொத்தம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT