கரூர்

கரூரில் இதுவரை 43 ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித்தொகை

DIN

கரூா்: கரூா் மாவட்டத்தில் இதுவரை 43 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

கரூா் மற்றும் மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட 135 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிப் பின்னா் பேசியது:

கரூா் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு வரை 28,000 பேருக்கு மட்டுமே உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 43,000 பேருக்கு முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோா் உதவித்தொகை உள்ளிட்ட 8 வகையான மாதாந்திர உதவித்தொகைகளை ஜெயலலிதா அரசு வழங்கி வருகின்றது. ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகின்றது என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில் வருவாய்க் கோட்டாட்சியா் என்.எஸ். பாலசுப்ரமணியன், சமுக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ந. ரசிகலா, நகரக் கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சிவகாமி, ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிமன்றத் தலைவா் சாந்திசேகா், முன்னாள் தலைவா் ரெயின்போசேகா், கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் என்.எஸ்.கிருஷ்ணன், சு.மல்லிகா, வட்டாட்சியா்கள் செந்தில் (கரூா்), கண்ணன் (மண்மங்கலம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT