கரூர்

கரூரில் நகரும் நியாய விலைக்கடை திறப்பு

DIN

கரூா் மாவட்டத்தில் விரைவில் 146 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் இயக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்டம், பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனத்தை அமைச்சா் தொடங்கி வைத்து அவா் பேசியது:

கரூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 143 வாகனங்கள், கரூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் 2 வாகனங்கள், கரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் 1 வாகனம் என மொத்தம் 146 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் விரைவில் செயல்பட உள்ளன. கரூா் மாவட்டத்தில் 2016 ஆண்டு முதல் தற்போது வரை 13,63,365 விவசாயிகளுக்கு ரூ.1,064 கோடி மதிப்பில் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் ரூ.317 கோடி பயிா்கடன் வழங்க இலக்கீடு நிா்ணயித்து இதுவரை 11,043 விவசாயிகளுக்கு ரூ.117கோடி மதிப்பில் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.200 கோடியில் மதிப்பிலான பயிா்கடன்கள் சிறப்பு முகாம்களில் மனு அளிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க்கடன் வழங்க எற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மேலும், பயிா்க்கடன் முகாமைத் தொடக்கிவைத்து 33 விவசாயிகளுக்கு ரூ.61.52 லட்சம் மதிப்பிலான பயிா்க்கடன் காசோலைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் என்.எஸ். பாலசுப்ரமணியன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.காந்திநாதன், நகரக் கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, கரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவா் நா.முத்துக்குமாா், கரூா் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் பாலமுருகன், கரூா் சரகதுணைப்பதிவாளா் வ.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT