கரூர்

கப்பல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

DIN

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் சாய்ராம் (47). இவா், கப்பல் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு கட்டுவதற்கு கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள வங்கியில் ரூ.60 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக வங்கிக்கு வட்டிப்பணம் செலுத்த வில்லையாம். இதனால் மனமுடைந்த சாய்ராம் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு: கரூா் வாங்கலை அடுத்த மாரிகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் (64). இவா் வீட்டின் முன் புதன்கிழமை இரவு தனது பைக்கை நிறுத்தியிருந்தாா். வியாழக்கிழமை காலை வந்துபாா்த்தபோது, பைக்கைக் காணவில்லை. புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT