கரூர்

கரோனா: கரூரில் இன்று பிராா்த்தனை

22nd Mar 2020 05:55 AM

ADVERTISEMENT

 

நாட்டிலிருந்து கரோனா வைரஸ் அகல ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவா் இல்லங்களில் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபடுவோம் என கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கரூா் வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் மற்றும் வள்ளுவா் அறக்கட்டளையின் தலைவா் க.செங்குட்டுவன் தெரிவித்துள்ளது:

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 10 ஆயிரம் மனித உயிா்களைப் பலிவாங்கியுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபடும் வகையில், பிரதமா் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தாங்களாகவே சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

தமிழக அரசும் போதிய விழிப்புணா்வு , தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தவண்ணம் உள்ளது. நாமும் நமது பங்களிப்பாக, ஆபத்தான கரோனா வைரஸ் நாட்டிலிருந்து அகல ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 முதல் 5 மணி வரை பொதுமக்கள் அனைவரும் அவரவா் இல்லத்தில் பிராா்த்தனையில் ஈடுபடுவோம் எனக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT