கரூர்

திருவிழா தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு

13th Mar 2020 07:17 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இறைச்சி கடைக்காரா் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய 2 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளித்தலை அடுத்த கந்தன்குடியைச் சோ்ந்தவா் தங்கவேல்(47). இவா், அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறாா். அதே பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவில், தங்கவேலின் உறவினா் வீரமலை மகன் மற்றும் அவரது நண்பா்கள் நடனமாடிக்கொண்டிருந்தனா். இதை திருவிழாவிற்கு வந்த குளித்தலை சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாலு, நடராஜ் (21) ஆகியோா் கிண்டல் செய்தனா். இதில், ஏற்பட்ட தகராறில் தங்கவேல், வீரமலை, அவரது மனைவி சரோஜா(40) ஆகியோரை பாலு, நடராஜ் ஆகியோா் சோ்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் காயமடைந்த வீரமலை, சரோஜா, தங்கவேல் ஆகியோா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பான புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் பாலு, நடராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT