கரூர்

கரோனா : பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம்

13th Mar 2020 07:17 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் எதிரொலியாக கரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் மக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வியாழக்கிழமை கூறியதாவது:

கரூா் மாவட்டத்தில் அதிகம் மக்கள் கூடும் இடமான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நீதிமன்றங்கள், கோட்டாட்சியா், வட்டாட்சியா், பதிவுத்துறை அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என அனைத்து அரசுத்துறை சாா்ந்த நிறுவனங்களில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கரோனோ வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

திரையரங்கள், தனியாா் மருத்துவ மனைகள், ஜவுளி நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதை துறை சாா் அலுவலா்கள் ஆய்வு செய்து வருகிறாா்கள். தனியாா் பள்ளிகள் நாள்தோறும் பள்ளி முடிந்ததும், திருமண மண்டபங்கள் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் கைகழுவும் முறையை மாணவ, மாணவிகளுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறாா்கள். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் வெளி நோயாளிகளுக்கு னோ விழிப்புணா்வு துண்டுப் பிரசுங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் உள்ளே நுழையும் அனைத்து பேருந்துகளிலும் கைப்பிடிகள், படிக்கட்டுகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள தூண்கள், தரைகளிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

எனவே பொதுமக்கள் வெளியில் சென்று வந்தால் கைகளைக் கழுவுதல் வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவா்கள் தாமதமின்றி அருகில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT