கரூர்

வெறிநாய் கடித்து 5 ஆடுகள் சாவு

8th Mar 2020 01:08 AM

ADVERTISEMENT

கரூா்: கரூரை அடுத்த புலியூா் கோயில்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). விவசாயி. இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை ஆடுகளை அதே பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். அப்போது திடீரென ஆடுகள் கத்தியதால் சம்பவ இடத்திற்கு செல்வராஜ் சென்றபோது, அங்கு ஆடுகளை வெறிபிடித்த நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.

இதில் 5 ஆடுகள் இறந்தன. மேலும் 8 ஆடுகள் காயமடைந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்தும் புலியூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த ஆடுகளைப் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT