கரூர்

நகராட்சிக்கு வாடகை பாக்கியை செலுத்தாவிடில் கடைகளுக்கு சீல்

8th Mar 2020 01:07 AM

ADVERTISEMENT

கரூா்: கரூா் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை ரூ.7. 79 கோடி நிலுவை உள்ளது. இதைக் கட்டத்தவறினால் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நகராட்சி ஆணையா் சுதா தெரிவித்துள்ளாா்.

கரூா் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி ரூ.7.79 கோடி உள்ளது. இந்தத் தொகையை வசூலிக்க நகராட்சியில் முதுநிலை நகரமைப்பு அலுவலா், நகராட்சி பொறியாளா்(பொ), மேலாளா், வருவாய் அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் நகராட்சி அலுவலா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் வாடகைத் தொகையை முறையாக செலுத்தாத கரூா் பேருந்துநிலையம், ஆசாத் சாலை, வெங்கடேஸ்வரா சாலை, காமராஜா் தினசரி மாா்கெட், புதுகுளத்துப்பாளையம் சந்தையில் உள்ள கடைகள் ஆகிய பகுதிகளில் திடீரென சோதனை நடத்தியதில் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடகை நிலுவை வைத்திருக்கும் கடைக்காரா்கள் உடனே பாக்கியை நகராட்சிக்குச் செலுத்த தவறினால் கடைகளுக்கு சீல் வைத்து பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடைக் கட்டணம், காலியிட வரி ஆகியவற்றை உடனே செலுத்த வேண்டும். மேலும் நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய குடிநீா் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்திட வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT