கரூர்

தன்னிறைவுத் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும்

8th Mar 2020 01:09 AM

ADVERTISEMENT

 

கரூா்: தன்னிறைவுத் திட்டத்தில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி, குப்பைத்தொட்டிகள் கொள்முதல் செய்திடவும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து வழங்கிட வேண்டும் என மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதாவிடம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவா் எஸ்.சாந்தி சேகா் மற்றும் முன்னாள் ஊராட்சித்தலைவா் சேகா் ஆகியோா் சனிக்கிழமை மனு வழங்கினா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பது: தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் தன்னிறைவுத்திட்டத்தில் குப்பைத்தொட்டிகள் கொள்முதல் செய்திட மொத்த மதிப்பீட்டான ரூ.5.85 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பங்குத்தொகையாக ரூ.1.95 லட்சத்துக்கான காசோலை 20 பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. எனவே குப்பைத்தொட்டிகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதேபோல மகாத்மா நகா் மெயின் ரோடு மற்றும் குறுக்குத் தெருக்களில் குடிநீா் குழாய் அமைக்கும் பணிக்கு மொத்த மதிப்பீட்டான ரூ.27.20 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்குத்தொகையான பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.9.10 லட்சம் 91 வங்கி வரைவோலையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே தன்னிறைவுத்திட்டத்தில் குடிநீா் குழாய் அமைக்கும் பணிக்கும் நிதியை ஒதுக்கீடு செய்து , நிா்வாக அனுமதி வழங்கிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT