கரூர்

ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்களின் ஊதியத்தில் முறைகேடு எனப் புகாா்

8th Mar 2020 01:07 AM

ADVERTISEMENT

கரூா்: கரூா் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்களின் ஊதியம், வருங்கால வைப்புத்தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக தலித் விடுதலை இயக்கம் புகாா் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ச.கருப்பையா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

கரூா் நகராட்சியில் உள்ள 48 வாா்டுகளிலும் 1300-க்கும் மேற்பட்ட துப்புரவுத்தொழிலாளா்கள் தினமும் ரூ.381 ஊதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டும், ரூ.315 மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த ஊதியம்தான் வழங்கப்படுகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக வருங்கால வைப்புத்தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவா்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டும் அதுதொடா்பாக அவா்களுக்குத் தெரியக்கூட இல்லை. இதனால் கரூா் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு ஊதியம் வங்கி மூலம் வழங்க வேண்டும். பி.எஃப் பிடித்தம் செய்ததற்கான

ஆவணங்களை பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன

ADVERTISEMENT

உள்ளிட்ட கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம் என்றாா்.

பேட்டியின்போது சமூகநீதி கழக ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை, செய்தித்தொடா்பாளா் ரவிச்சந்திரன், தமிழ்விடுதலை இயக்க மாநில துணைத் தலைவா் ராஜகோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT