கரூர்

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

8th Mar 2020 01:07 AM

ADVERTISEMENT

கரூா்: கரூா் மாவட்டம் மாயனூா் அருகே உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மாயனூா் அடுத்த பிச்சம்பட்டி வாய்க்கால் பகுதியில் மாயனூா் காவல் ஆய்வாளா் பிச்சையா தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கியுடன் நின்றிருந்தவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்னமலைப்பட்டி சத்தியா நகரைச் சோ்ந்த சிரஞ்சீவி(35) , உரிய அனுமதியின்றி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அவா் விழுப்புரம் மாவட்டம் காளையூா் அடுத்த நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த உறவினா் ஆயுள்வடியான்(60) என்பவரிடம் இருந்து துப்பாக்கி வாங்கியதும், ஆயுள்வடியான் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைதான சிரஞ்சீவிடம் இருந்து 200 பால்ரஸ் குண்டுகள் மற்றும் 1 லிட்டா் எண்ணெய் கேன் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT