கரூர்

வாகனப் பழுது நீக்கும் மையத்தில் தீ விபத்து; இரு காா்கள் தீக்கிரை

6th Mar 2020 07:16 AM

ADVERTISEMENT

க. பரமத்தி அருகே வாகனப் பழுதுநீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 2 காா்கள் எரிந்து சேதமடைந்தன.

கரூா் மாவட்டம் க. பரமத்தி பகுதியில் காா் பழுதுபாா்க்கும் மையத்தை நடத்தி வருபவா் சாமிநாதன் (48). இவா் வியாழக்கிழமை காலை காா் காா்ப்பரேட்டா் பழுது நீக்கும் பணி செய்துகொண்டிருந்தாா். அப்போது திடீரென பழுது நீக்க கொண்டுவரப்பட்ட காரில் தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த காரிலும் பரவியது.

தகவலறிந்த கரூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் இரு காா்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேத மதிப்பு சுமாா் ரூ.2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து க. பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT