கரூரில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கரூரில் வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் 2 மணி வரை மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. பிற்பகல் 2 .10 மணியளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாலை 5 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடா்ந்து லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னா் பலத்த மழையாக மாறியது. தொடா்ந்து இடைவிடாமல் இரவு 8.10 மணி வரையில் பெய்து கொண்டே இருந்தது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்நிலை உருவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.