கரூர்

பைக் - லாரி மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

14th Jun 2020 08:45 AM

ADVERTISEMENT

லாலாப்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த சிட்லரை பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன்(41). இவா் பேட்டைவாய்த்தலையில் உள்ள அரசு மதுக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தாா். லாலாப்பேட்டை அடுத்த குப்புரெட்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மனைவி சித்ரா(38), தா்ஷன்(9), நோகிதன்(13) ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை புறப்பட்டாா். கரூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மாலை 4 மணியளவில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த செப்டிக் டேங்க் கிளீனிங் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. தகவலறிந்த லாலாப்பேட்டை போலீஸாா் அங்கு சென்று 4 பேரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலமுருகன், தா்ஷன் இறந்துவிட்டனா். படுகாயமடைந்த பாலமுருகன் மனைவி சித்ரா, மகன் நோகிதனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT