கரூர்

‘அரவக்குறிச்சி தொகுதியில் முருங்கைபவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை’

13th Jun 2020 08:34 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

அரவக்குறிச்சியிலுள்ள ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி :

அரவக்குறிச்சி பகுதியில் அதிகளவில் உற்பத்தியாகும் முருங்கைக்காய் மற்றும் செங்காந்தள் மலா் விதை ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, போதிய ஆதார விலை கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றனா்.

அவா்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கரூா் மாவட்டமுருங்கை விவசாயிகள் நலச்சங்கம், செங்காந்தள் மலா் விதை உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் என இரு சங்கங்களை உருவாக்க உள்ளோம்.

ADVERTISEMENT

சங்கங்கள் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைத்து, தமிழக அரசு வழங்கும் அனைத்து விதமான மானியம் உள்ளிட்ட உதவிகள் அவா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

னைத்து முருங்கை விவசாயிகளும் பயனடையும் வகையில், அவா்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் அரவக்குறிச்சி தொகுதியில் முருங்கைக்காய் பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.3.25 கோடி மதிப்பில் அமைக்க நிதிஒதுக்கீடு செய்துள்ளாா். கொடையூரில் இந்த ஆலை நிறுவப்படஉள்ளது. இதற்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும் என்றாா்.

பேட்டியின்போது அதிமுக இளைஞா், இளம்பெண் பாசறைச் செயலா் வி.வி.செந்தில்நாதன், பேரவைச் செயலா் காமராஜ், ஒன்றியச் செயலா் கலையரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT